
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
இந்தோனீசியாவின் சுமத்ரா தீவின் கதையை விவரிக்கும் புத்தம் புதிய கண்காட்சி சிங்கப்பூரின் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெறவிருக்கிறது.
“சுமத்ரா: பொற்தீவு” எனும் கண்காட்சி ஜூலை 30 முதல் நவம்பர்
7 வரை நடைபெறும்.
சுமத்ராவின் தனித்தன்மை வாய்ந்த கலாசார அடையாளத்தை எடுத்துக்காட்டும் 300க்கும் மேற்பட்ட காட்சிப்பொருட்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
ஆதிகாலத்திலிருந்து இன்றைய காலம்வரை, பல்வேறு கலாசார தாக்கங்களால் சுமத்ராவில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்காட்சியில் விவரிக்கப்படும்.
இடைக்காலத் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சர் திரு லுய் டக் இயூ, வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார்.
ஆசிய நாகரிக அரும்பொருளகம், இந்தோனீசியத் தேசிய அரும்பொருளகம், லெய்டனின் தேசிய இனவியல் அரும் பொருளகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்யும் இக்கண்காட்சி, சுமத்ரா கலாசாரத்தை எடுத்துக்காட்டும் முதல் அனைத்துலக நடமாடும் கண்காட்சியாகும்.
“பல்வேறு ஊடகங்களில் வெளிப்படும் அழகிய காட்சிப்பொருட்களுடன் சுமத்ராவின் வளமான கலாசார வரலாறு விவரிக்கப்படும்” என்று ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் இயக்குநர் டாக்டர் அலன் ச்சொங் கூறினார்.